Wednesday 6 August 2014

வீட்டில் கொசுக்கள் வராமல் தடுக்க இயற்கை வழி.?



 
மழைக்காலத்தில் வீட்டைச் சுற்றி நீர் தேங்கியிருப்பதால், வீட்டில் கொசுக்களானது அழையா விருந்தாளியாக வந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கும். ஏனெனில் கொசுக்களானது நீர் தேங்கும் பகுதியில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே வீட்டில் கொசுக்களின் தொல்லையில் இருந்து விடுதலைப் பெற, அவற்றிற்கு பிடிக்காத வாசனை கொண்ட பொருட்களை அவை நுழையும் இடத்தில் வைத்தால், கொசுக்கள் வீட்டினுள் நுழைவதைத் தடுக்கலாம். இங்கு கொசுக்களை அழிக்கும் மற்றும் கொசுக்கள் வராமல் தடுக்கும் சில இயற்கையான பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வீட்டில் பயன்படுத்தினால், வீடு கமகமவென்று மணப்பதுடன், கொசுக்களின்றி சுத்தமாகவும் இருக்கும். எலுமிச்சை மற்றும் கிராம்பு எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதன் மேல் கிராம்பை சொருகி, கொசுக்கள் நுழையும் இடத்தில் வைத்தால், அதன் வாசனையினால் கொசுக்கள் வருவதைத் தடுக்கலாம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.