Saturday 20 September 2014

கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான உணவு பொருட்கள் யாவை?

கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் ஜிங்க், வைட்டமின் சி, புரோட்டீன் ஆகியன. இவைகள. இருக்கும் உணவுகளை சாப்பிட்டால், கூந்தலில் எந்த பிரச்சனையும் வராது. கூந்தல் உதிர்ந்தால் புரோட்டீன் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். அவை கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, பழுதடைந்த முடியையும் சரிசெய்கயும். பாதாமில் வைட்டமின் அதிகம் உள்ளது. இது கூந்தலை விரைவில் வளரச் செய்கிறது. கால்சியம் சத்தும் பாதாமில் அதிக அளவு உள்ளது. இது கூந்தலின் வேர்களை நன்கு வலுவடைய செய்யும். மற்றும் இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கூந்தலை பட்டுப் போன்று மென்மையாக வைக்கிறது. சிகப்பு அரிசி அரிசியில் காப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.  வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ளது.  இந்த அரிசியை அதிகம் உணவில் சேர்த்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும் . பச்சை காய்கறிகளான பசலைக் கீரை, கடுகு கீரை போன்றவற்றில் கூந்தலுக்கு தேவையான இரும்புச்சத்து நிறைந்துள்ளது.  இதில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள், இரும்புச்சத்துக்களை உடலில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.  கொண்டைக்கடலையில் அதிக அளவில் ஜிங்க் உள்ளது. இது ஸ்கால்ப்பில் பொடுகு ஏற்படாமல் தடுப்பதில் சிறந்தது. அதிலும் இதில் உள்ள கனிமச்சத்துக்கள் பொடுகு வராமல் பாதுகாப்பதில் சிறந்தது. எனவே இதனை உணவில் சேர்த்தால், கூந்தல் உதிர்தலை தடுக்கலாம்.




CHEAP AIRLINE +TRAIN+BUS TICKET



CHEAP SMART HANDY AND FOLDING SOLAR POWER GENERATOR

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.