Wednesday 1 October 2014

செவ்வாய்,கிரகம்,ஆய்வு,புகைப்படம்,மங்கள்யான்,பெருமை

ஆசியாவில் இருந்து செவ்வாய்க்கு அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது
                                     இந்தியாவில் இருந்து செவ்வாய் கிரக ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் செவ்வாயின் முப்பரிமாண புகைப்படம் ஒன்றை இன்று எடுத்து அனுப்பியுள்ளது.  வரலாற்றில் இந்தியாவை இடம் பெற செய்த பெருமையுடன் செவ்வாய் கிரகத்தை சுற்றி ஆய்வு பணியில் ஈடுபட்டு வரும் மங்கள்யான் செயற்கைக்கோளில் உள்ள கேமிராக்கள் செவ்வாய் கிரகத்தின் உயர்தர புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளது.  இந்த விண்கலத்தில் எம்.சி.சி. எனப்படும் செவ்வாய் வண்ண கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இது செவ்வாய் கிரக மேற்பரப்பில் உள்ள அம்சங்கள் மற்றும் அங்கு உள்ள சேர்மங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வழங்கும் வகையில் மூவர்ண கேமிராவாக செயல்படும்.  செவ்வாயின் வண்ண புகைப்படம் இஸ்ரோவின் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு முன்பு செவ்வாயின் வட பகுதியில் ஏற்பட்ட புழுதி புயல் குறித்த புகைப்படத்தை மங்கள்யான் அனுப்பியது.  இது செவ்வாயின் மேற்பரப்பில் இருந்து 74.500 கி.மீ. தொலைவில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் செவ்வாயின் புகைப்படத்தை விண்கலம் முதலில் எடுத்து அனுப்பியது.  உலகின் மிக குறைந்த செலவில் அதாவது ரூ.450 கோடி மதிப்பிலான திட்டத்தில் இந்தியாவின் விண்கலம் உருவாகியுள்ளது.  ஆசியாவில் இருந்து செவ்வாய்க்கு அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளதுடன் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரக சுற்று வட்டபாதையில் வெற்றிகரமாக விண்கலத்தை நிலைநிறுத்திய நாடு என்ற பெருமையும் கிடைத்துள்ளது.

[செவ்வாய் கிரகம் சென்ற மங்கள்யான்],[செவ்வாய் கிரகத்தை நோக்கி],[செவ்வாய் சுற்றுகலன்],[செயற்கைக்கோள் மங்கள்யான்], [செவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படத்தை பூமிக்கு அனுப்பியது],
[செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் செயற்கைக்கோளை]