Sunday 10 August 2014

´ஈராக்கில், பயங்கரவாதிகள் மீது அமெரிக்க படைகள் நடத்தும் தாக்குதல்

 ´ஈராக்கில், பயங்கரவாதிகள் மீது அமெரிக்க படைகள் நடத்தும் தாக்குதல், குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே நீடிக்கும். அதேபோல், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே தாக்குதல் நடத்தப்படும். அங்குள்ள அமெரிக்கர்களையும், அப்பாவி மக்களையும் பாதுகாப்பதற்காகவே, இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது,´ என, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விளக்கம் அளித்துள்ளார். ஈராக்கில், அரசுப் படையினருக்கு எதிராக, சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், கடந்த ஜனவரி மாதம் முதல், கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மொசூல், கிர்குக் உள்ளிட்ட முக்கியமான, 15 நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி, அவற்றை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஈராக்கில் உள்ள தன்னாட்சி பகுதியான, குர்திஷ் பிராந்தியத்தை கைப்பற்றவும், கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த பிராந்தியத்தின் முக்கியமான பகுதிகளை கைப்பற்றியுள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பினர், அதன் தலைநகரான, எர்பில்லை நோக்கி, தாக்குதல் நடத்தியபடி முன்னேறிவருகின்றனர். அந்த பகுதியில் வசிக்கும் பூர்விக குடிகளான,´யாஸிடி´ பிரிவினர் மீதும் மற்ற சிறுபான்மை மக்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உயிருக்கு பயந்து, 40 ஆயிரம் பேர், அருகில் உள்ள சிஞ்சர் மலைப் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள், உணவு, தண்ணீர் இல்லாமல், கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, எர்பில் நோக்கி, ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பினர் முன்னேறுவதை தடுக்கும்படி, ஈராக் அரசு, அமெரிக்காவிடம் வலியுறுத்தியது. இதையேற்று, ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பினர் மீது, வான் வழி தாக்குதல் நடத்த, அமெரிக்க படையினருக்கு ஒபாமா நேற்று முன்தினம் உத்தரவிட்டார். கடந்த இரண்டு நாட்களாக, ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பினரை குறிவைத்து, அவர்களின் மறைவிடங்கள் மீது, அமெரிக்க விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. சிஞ்சர் மலைப் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளவர்களுக்கு, விமானங்கள் மூலம், உணவு மற்றம் தண்ணீர் பொட்டலங்கள் வீசப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் வான்வழி தாக்குதலுக்கு, அதன் நட்பு நாடுகளான, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கிடையே, ஈராக்கில் நடத்தப்படும் தாக்குதல் குறித்து, ஒபாமா, நேற்று விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: ஈராக்கின் எர்பில் நகரில் அமெரிக்கர்கள் கணிசமாக உள்ளனர். அவர்களையும், அங்குள்ள அப்பாவி மக்களை பாதுகாக்கவும் தான், இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. சிஞ்சர் மலைப் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ள அப்பாவி மக்களை பாதுகாப்பதற்காக, பயங்கரவாதிகள், எர்பில் நோக்கி முன்னேறுவதை தடுக்கும் வகையில், வான் வழி தாக்குதல் நடத்தப்படுகிறது. அமெரிக்க படையினரின் வான் வழி தாக்குதல், ஒட்டு மொத்த ஈராக்கிலும் நடத்தப்படாது. குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும், குறிப்பிட்ட காலத்துக்கு தான் நடத்தப்படும். அப்பாவி மக்களுக்கு உலகத்தின் எந்த மூலையில், பாதிப்பு ஏற்பட்டாலும், அந்த விஷயத்தில் அமெரிக்கா தலையிடும்.பாதிக்கப்பட்டவர்கள், யார் என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. அப்பாவிகள் பாதிக்கப்பட கூடாது என்பதே, எங்களின் கவலை. அதேநேரத்தில், அவசியமற்ற விஷயங்களில் அமெரிக்கா ஒருபோதும் தலையிடுவது இல்லை. இவ்வாறு, அவர் கூறினார். அக்கா|தம்பி|அத்தை|மாமா|தமிழ்|வீடியோ|ஆண்|பெண்|பெண்கள்|நடிகை|ஆசிரியை|காம| செக்ஸ்|குறி|நிர்வாண|நிர்வாணம்|படம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.