Friday 8 August 2014

சொட்டையான இடத்தில் முடி வளர


கூந்தல் அடர்த்தியாக|கருமையாக ...|முடி வளர|பாட்டி வைத்தியம்|கூந்தல் கருகரு வென செழித்து வளர ...

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும். முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து வர முடி வளரும்.  பூசனி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவிவர முடி வளரும். கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும், முடியும் வளரும்.  முடி இல்லாமல் சொட்டையாக இருக்கும் இடத்தில் முடி வளர   முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க பிஞ்சு ஊமத்தின் காயை அரைத்து பூசினால் புது முடி முளைக்கும்.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.